64
இந்திய ராணுவத்தின் தரைப்படையில் காதிர் முகைதீன் கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள்(NCC) ராஜ்குமார் மற்றும் முத்தையா ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு கல்லூரியின் நிர்வாகி சங்கர் நினைவு பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கல்லூரி முதல்வர் முஹம்மது முகைதீன், துணை முதல்வர்கள் மேஜர் கணபதி, முஹம்மது நாசர், தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் அப்பாஸ் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் பொறியாளர் பிரிவுக்கு சிப்பாயாக ராஜ்குமாரும், ராணுவ சேவை காவல் பிரிவு சிப்பாயாக முத்தையாவும் ஊட்டியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெட் பிரிவு சிப்பாயாக பால்பாண்டியும் தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.