தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் என பல இடங்களில் நடைபெற்று வரும் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அந்த வகையில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமினை ரோட்டரி சங்க தலைவர் Rtn. S. சாகுல் ஹமீது முன்னிலையில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் Rtn. A. ஜமால் முகமது, முன்னாள் தலைவர்கள் Rtn. A.M. வெங்கடேஷ், Rtn. T. முகமது நவாஸ்கான், முன்னாள் செயலாளர் Rtn. Z. அகமது மன்சூர், சங்க உறுப்பினர் Rtn. முகமது இபுராஹீம், மருத்துவர் கலைவாணி, செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.