176
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள்களுக்கு வெளுத்து வாங்கிய மழை சிறிது காலம் ரெஸ்ட் எடுத்தது. இதனால் அதிரையில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது. எனினும் அவ்வப்போது வெயில் அடித்தும் லேசான மழையும் பெய்தது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதையடுத்து தற்பொழுது மழை பெய்ய தொடங்கியது.