சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்திருப்பதால், பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு வடிக்கையாளர்களுக்கு, தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டால், அது எத்தனாலுடன் கலந்து டேங்கின் அடிப்குயில் தங்கும் என்றும், இதனால் வண்டி ஸ்டாட் ஆகாமல் போகும், வாகனம் குழுங்கிக் குழுங்கி செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 91 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல டீசலின் விலையும் 28 காசுகள் உயர்ந்து ஒரு விட்டர் 84 ரூபாய் 44 காசுகளாக விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் 100 ரூபாயை தொடும் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91 ரூபாய் 92 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.