Home » சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்: விராட் கோலி

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்: விராட் கோலி

0 comment

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்திய அணி 317-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் அபாரமாக விளையாடிய தமிழக வீரர் அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். போட்டிக்கு பிறகு பரிசளிப்பு விழாவில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

முதல் போட்டியின் போது சொந்த மண்ணில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடியது சற்று விசித்திரமாக இருந்தது. ரசிகர்கள் இருப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு இந்தப் போட்டிதான் உதாரணம். சென்னை ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள். கிரிக்கெட் மீது அவர்கள் நல்ல புரிதல் கொண்டவர்கள். எங்களுக்கு மிகச்சிறந்த ஆட்டமாக இது அமைந்தது. இங்குள்ள சூழல் இரு அணிகளுக்குமே சவால் நிறைந்தாக இருந்தது.

ஆனால் நாங்கள் பேட்டிங்கில் அதிக பயன்பாட்டை காட்டினோம். பிட்சின் தன்மையை கண்டு நாங்கள் பீதி அடையவில்லை. நாங்கள் உறுதியுடன் விளையாடி 600 ரன்களை சேர்த்தோம். ரன்களை குவித்தால் பந்து வீச்சாளர்கள் அவர்கள் பணியை சிறப்பாக செய்வார்கள் என்று நாங்கள் அறிந்து இருந்தோம். நேர்மையாக சொல்வது என்றால் இந்த போட்டியில் டாஸ் பெரிய அளவில் முக்கியம் அல்ல.

ரிஷப் பண்ட் தனது கீப்பிங்க்கில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அக்ஸர் படேலுக்கு இது மிகச்சிறப்பான தருணம். அஸ்வின் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார். எங்கள் இருவருக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமாக அமைந்தது. அகமதாபாத் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கப்போகிறது. இங்கிலாந்து அணி தரமான வீரர்களை கொண்டது. எனவே, நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்” என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter