தமிழகத்தில் மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் முதல்முறையாக தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு பகல் 1.15 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது.
மே 3 ஆம் தேதி மொழிப்பாடம், மே 5 ஆம் தேதி ஆங்கிலம், மே 7-ஆம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் உள்ளிட்ட 9 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மே 11-ஆம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பவியல் பிரிவுக்கான தேர்வு நடத்தப்படுகிறது.
மே 17 -ஆம் தேதி கணிதம், விலங்கியல் உள்பட 10 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மே 19 உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட 11 பாடங்களுக்கும் மே 21-ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு அட்டவணை :
