அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் 92 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அதில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டெமி லீ என்ற அழகி முதல் இடத்தை பெற்று..மிஸ் யுனிவெர்ஸ் (பிரபஞ்ச அழகியாக) ஆக அறிவிக்கப்பட்டார். முன்பு 1994 இல் இந்தியாவை சேர்ந்த சுஸ்மிதா சென் மிஸ் யுனிவெர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார், அத்துடன் உலக அழகியாக இந்த ஆண்டு 2017 இல் இந்தியாவை சேர்ந்த மனுஷி ஷில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.