ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரவுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா தன்னை ஜெயலலிதாவின் மகள் என்ற அறிவிக்குமாறும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மறைந்த ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் பெயரினை களங்கப்படுத்த கூடாது என்பதால் இது வரை அமைதி காத்ததாகவும், தற்போது அவரது வளர்ப்பு தந்தை இறந்து விட்டதால் இது குறித்து அவர் கூறுவதாகவும் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கை வைஷ்ணவ பிராமிண முறைப்படி செய்ய வேண்டும் என்று அம்ருதா கேட்டுக்கொண்டுள்ளார். அம்ருதாவின் கோரிக்கை மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.