அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது நவாஸ். இவர் அதிரை முத்தம்மாள் தெருவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற செய்யது நவாஸ், பிற்பகல் 3 மணியளவில் திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் பின்பக்கச் சுவற்றில் ஏறி குதித்த கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 1/2 சவரன் தங்க நகையையும், ரூ.26,000 ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். உடனே அதிராம்பட்டினம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விரைந்து வந்து கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
பட்டப்பகலில் பிரதான சாலையில் உள்ள வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அதிரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





