அதிராம்பட்டினம் MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகளாக ஜனாப் F. அப்சர், ஜனாப் B. சஹாபுதீன், ஜனாப் M. அப்துல் ஹாதி, ஜனாப் Q.M. அன்சாரி, ஜனாப். S. முஹம்மது மீராசாஹிப், ஜனாப் H. முஹம்மது ஜான், ஜனாப் A. சகாபுதீன், ஜனாப் S. நிஜாமுதீன், ஜனாப் A அஹமது அனஸ் ஆகியோரை தமிழ்நாடு வஃக்ப் வாரியம், வஃக்ப் சட்டங்களுக்கு உட்பட்டு நிர்வாகிகளாக நியமித்து ஆணை பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று 27/02/2021 சனிக்கிழமை அதிரை காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் உள்ள MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளை அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் தலைவராக ஜனாப் M. அப்துல் ஹாதி அவர்களும், செயலர் மற்றும் தாளாளராக ஜனாப் S. முஹம்மது மீராசாஹிப் அவர்களும் நிர்வாகக் குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






