அதிரையில் மௌலானா அபுல் கலாம் பயிற்சி மையத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. UPSC, TNPSC, RRB போன்ற அரசுபணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி மையத்தின் தொடக்க விழா நேற்று மாலை 4.30 மணியளவில் அதிரை ALM பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அசாருதீன் வரவேற்புரை ஆற்றினார். பயிற்சி மையத் தலைவர் M.S. அப்துல் ரஜாக் தலைமையுரை ஆற்றினார்.
பயிற்சி மைய பொருளாளர் M. நெய்னா முஹம்மது, “நமது நோக்கமும் குறிக்கோளும்” என்ற தலைப்பிலும், பயிற்சி மைய துணைத்தலைவர் A.M.A. காதர், “நிறுவனத்தின் தேவையும் அவசியமும்” என்ற தலைப்பிலும், சென்னை LEAD அகாடமி தலைவர் N. முஹம்மது, “அரசுத் தேர்வின் பயன்களும் தேவைகளும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவில் அதிரையை சேர்ந்த பெரியவர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.