அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4, துப்பரவு பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் என்று துணை இயக்குனருக்கு மனு கொடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுமார் 70 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.நாள்தோறும் அதிரை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றார்கள்.இவர்கள் குப்பைகளை அள்ளுதல்,சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்துதல் மேலும் கழிப்பறைகளை சுத்தப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.இது போன்ற எளிதில் நோய் பரவக்கூடிய பணிகளில் மேற்கோள்ளும் இவர்களுக்கு தோல்நோய்கள்,நெஞ்சக நோய்கள் என பலவிதமான நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
தூய்மை படுத்தும் பணியில் இருக்கும் இவர்களுக்கு மருத்துவ முகாம்கள்,மருத்துவ சிகிச்சைகளை அதிரை பேரூராட்சியில் நடத்தி தரவேண்டும் துணை இயக்குனருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பலவித முன்னெடுப்புகளையும்,தூய்மைப்பணிகளையும்,சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வுகளையும்,அறிய முடியாத அறிஞர்களை அறிமுகப்படுத்துவதிலும் சிறந்து விளங்கும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 என்பது குறிப்பிடத்தக்கது.