அதிரை 17வது வார்டுக்கு உட்பட்ட மேலத்தெரு பகுதியில் தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் இயங்கிவருகிறது. அப்பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் அதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இன்று(27.11.2017) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க தலைவர் சஃபிர் அகமது தலைமையில் அங்கு சென்ற நிர்வாகிகள் பள்ளத்தை பார்த்து இரவு 7.30 மணியளவில் களத்தில் இறங்கி அந்த பள்ளத்தை மூடிவிட்டு சென்றனர். இந்த செயலை பார்த்த அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
சுமார் முன்று வருடங்களுக்கு முன்பாக போடப்பட்ட கூட்டு குடிநீர் குழாய்க்காக இந்த பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்று இந்த சாலை மோசமான நிலையில் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் ஒரு சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பேருராட்சி விரைந்து இந்த சாலையை சீர் அமைத்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.