Saturday, April 20, 2024

திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தைதான் நீண்ட இழுபறியில் உள்ளது. தற்போது இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

திமுகவை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யுனிஸ்டுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள், மமவுக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கியது. ஆனால் மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான தொகுதி ஒதுக்க திமுக முன் வந்தததால் இரு கட்சிகளும் அதிருப்தி நிலையிலே இருந்து வந்தன.

இந்த நிலையில் மதிமுகவுடன், திமுக விறுவிறுப்பாக பேச்சு நடத்தி வந்தது. மதிமுக 12 தொகுதிகள் கேட்டது. திமுக 6 தொகுதிகள் தருவதாக கூறியதால் இழுபறியுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. இந்த 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த 6 தொகுதிகள் என்னென்ன? இந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று மதிமுக அறிவித்துள்ளது. திமுக காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு நடத்தி வருகிறது. இதுவும் சுமுகமாக முடியும் பட்சத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

திமுகவுடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்துக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்தபோது கூறியதாவது:- திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டோம். சனாதன சக்திகளை முறியடிப்பது என உறுதியேற்று திமுகவுக்கு ஆதரவாக இருப்போம். ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கருணாநிதிக்கு உறுதி அளித்திருந்தேன். வாக்கு சேகரிப்பில் ஈடுபட குறைவான நாட்களே இருப்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று வைகோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...