Home » திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

0 comment

தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது. ஒரு வாரமாக இழுபறி நீடித்த நிலையில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவே கூட்டணி பேரங்கள் முடிந்து சுமுகமான தீர்வு எட்டப்பட்ட நிலையில் தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ஆகியோரின் தீவிர பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பாக வெற்றிபெற்ற வசந்தகுமார் எம்பி காலமானதை அடுத்து இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் முதலில் 40 இடங்கள் கேட்டது.

திமுக 19 இடங்கள் கொடுக்க முன் வந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் கடுமையான இழுபறி நீடித்தது .
இதையடுத்து நேற்று திமுக 25 தொகுதிகள் கொடுக்க இறங்கி வந்தது. காங்கிரஸ் மேலிடம் இது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி திமுகவின் பங்கீட்டை ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு கட்சிக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவிற்கு வந்து சுமுகமான தீர்வு எட்டப்பட்டது.

இது தொடர்பாக பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியும், எழுச்சியும் அளிக்கிறது. தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது. திமுக கூட்டணியின் வெற்றிதான் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் .

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டியில், பாஜகவை வீழ்த்த வேண்டும். இது அரசியல் போர்க்களம். இங்கு மனநிறைவை பற்றி பேசுவதற்கு எல்லாம் நேரமில்லை. போதுமான இடத்தில் போட்டியிடுகிறமோ இல்லையா என்பது எல்லாம் விஷயம் இல்லை. திமுக கூட்டணியில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிதான் எங்கள் நோக்கம் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter