Home » திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

0 comment

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்நிலையில் திமுக – கொமதேக கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தற்போது சுமுகமாக முடிந்துள்ளது. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter