தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட முக்கிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று 15 பேர் அடங்கிய அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கின்றது. அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமமுக துணை தலைவருமான எஸ். அன்பழகன் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
அதேபோல, அமமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். அமமுக துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி, பாபநாசம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதே போல பலரும் போட்டியிட உள்ளனர்.