Wednesday, February 21, 2024

தடை செய்யப்பட வேண்டியது மாட்டிறைச்சியா?பன்றி இறைச்சியா??

Share post:

Date:

- Advertisement -

உலகில் வாழும் மனிதர்கள் சைவம் அசைவம் என்று பல வகையான உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர் பல வகைகளில் மனிதர்கள் உண்ணும் பழக்கமுடையவர்களாக இருப்பதால் தான் உணவு பற்றாகுறை ஏற்படாமல் உலகம் சீராக நடை போடுகிறது.

சைவத்தை முன்னிலை படுத்தி அசைவத்தை மறுத்தாலும் அல்லது அசைவத்தை முன்னிலை படுத்தி சைவத்தை மறுத்தாலும் உலகின் உணவு முறை சீர்குலைந்து விலைவாசி பல மடங்கு உயர்ந்து விடும்   அல்லது பல மனிதர்கள் உணவு கிடைக்காது அல்லல் படும் சூழலே உருவாகும்

காரணம் உலகின் பல நாடுகள் சைவத்தை நம்பியும் உலகின் பல நாடுகள் அசைவத்தை நம்பியும் தான் வாழ்வாதாரங்களை பெறும் முறையில் இறைவன் வடிவமைத்துள்ளான்

இந்த சாதாரண ஞானத்தை பெறாதவர்கள் தற்போது நம் இந்தியாவை ஆளுகிற காரணத்தால் தான் இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதே என்று நடை முறைக்கு சாத்தியம் இல்லாத சட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

மேலோட்டமாக பார்க்கும் போது மாடுகளின் மீது காரூண்ய ஜீவிகளாக இவர்கள் தங்களை வெளிப்படுத்தி கொண்டாலும் இந்த சட்டத்தை இவர்கள் தூக்கி பிடிப்பதற்க்கு மூல காரணமே முஸ்லிம்கள் குர்பானி எனும் பெயரால் மாடுகளை முறையாக அறுத்து தானும் உண்ணுவதோடு பிறர்களுக்கும் கொடுத்து மதநல்லிணக்கத்தை பேணி இந்து மக்களின் நம்பிக்கையை பெறுகிறார்கள் என்ற ஆத்திரம் தான் மூல காரணம்

அதனால் தான் இறைச்சிக்காக மாடுகளை வெட்டாதீர்கள் என்று சொல்லும் இவர்கள் இறைச்சிக்காக கோழிகளை வெட்டாதீர்கள் ஆடுகளை வெட்டாதீர்கள் பன்றிகளை வெட்டாதீர்கள் என்று சொல்லுவது இல்லை மாடுகளை அறுக்கும் போது மாத்திரம் தான் அவைகளுக்கு வேதனை ஏற்படுமோ ?

ஏன் கோழி ஆடு பன்றிகளை அறுத்தால் அவைகளுக்கு வேதனை ஏற்படாதோ ?

அல்லது கோழி ஆடு பன்றிகள் வேதனை படுவதை மட்டும் இவர்கள் ரசிப்பார்களோ ?

நியாயப்பிரகாரம் தடை செய்வதாக இருந்தால் இறைச்சிக்காக பன்றியை வெட்டுவதை தான் தடை செய்ய வேண்டும் காரணம் பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது அறிவியல் ரீதியான உண்மை

மத்திய மாநில சுகாதார துறை விற்பன்னர்கள் கூட அடிக்கடி பன்றி இறைச்சியால் ஏற்படும் தீங்குகளை பற்றி எச்சரிக்கை செய்தே வருகின்றனர்

ம‌னித‌ உட‌லில் பல வ‌கையான புழு இன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்

அதில் சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌

அதே நேரம் இதர புழுக்கலால் மனித உடலுக்கு தீங்குகள் தான் ஏற்படுகிறது

அதில் ஒன்று தான்

“டேனியா சோலிய‌ம்” Taenia solium
(pork tapeworm) என்ற புழுவாகும்

இது ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் மனிதனின் உண‌வுக்கு குழாயின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது

 

இந்த டேனியா சோலியம் எனும் புழுக்கள் உணவு குழாய் பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது
இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை

இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன

மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு அவை பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது

இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் விளைவை ஏற்படுத்துகின்றன

 

டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம்

 

“ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்”

(Trichura Tichurasis) என்ற புழுவாகும்

பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் இது பரவுகிறது

 

டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்

 

இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது அதை உண்ணுவோர் மத்தியிலும் இருக்கும் தவறான கருத்து

அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர் இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து சாப்பிட்டவர்கள் தான் ஆனாலும் அவர்களை இந்த புழுக்கள் தாக்கியே உள்ளது

 

இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண நீரின் (சமையலின் போது) கொதி நிலையில் இறப்பதில்லை

 

இது மட்டுமில்லாது பன்றியின் இறைச்சியில் உள்ள மித மிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி மக்கள் “ஹைபர்டென்ஷன்”ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர்

 

நோய்களுக்கான காரணியாக பன்றி இருப்பது மட்டுமின்றி அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது

 

பண்டைய காலங்களில், நாகரீக கழிவறைகள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன

 

ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று சந்தேகம் தோன்றலாம்

 

ஆனால் பன்றிகள் சுகாதார‌மான‌ சூழ்நிலையில் கண்காணிப்போடு வ‌ள‌ர்க்க‌ப்பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன
=========================

இந்தளவு தீங்கை தரும் இறைச்சியாக பன்றிகள் இருப்பதை மத்திய அரசாங்கம் அறிந்தும் அதை தடுப்பதற்க்கு முயற்சி செய்யாத காரணம் முஸ்லிம்கள் இயல்பிலேயே பன்றிகளை உண்ண மாட்டார்கள் என்ற ஒரு காரணத்தை தவிர வேறு இல்லை

அது போக பன்றி இறைச்சியை தடை செய்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அதை ஆதரிப்பார்கள் என்ற அடிப்படையும் காரணம்

 

அது போக இந்திய அளவில் முஸ்லிம் அல்லாத இதர மக்களால் அதிகமதிகம் உண்ணப்படும் இறைச்சியும் மாடுகள் என்பதை மூடி மறைக்க பார்க்கின்றனர்

மேலும் மாட்டிறைச்சி உண்ணுவதால் மனித உடலுக்கு தீங்கு என்று எந்த ஆய்வும் இதுவரை அறிக்கை தரவில்லை

 

மாறாக மனிதனின் உடல் ஆரோக்யத்திற்க்கு ஏற்ற பல சத்துக்கள் மாட்டிறைச்சியில் உள்ளது என்பதே மருத்துவர்களின் முடிவாகும்

 

اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِ‌ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِ‌ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْم ٌ‏

 

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான் ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை

நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்

(அல்குர்ஆன் : 2:173)

 

நட்புடன் J. இம்தாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை அரசு மருத்துவமனை பிணவரை பகுதியை சுத்தம் செய்த IMMK மருத்துவ அணியினர்..!!

அதிராம்பட்டினம் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை...

மரண அறிவிப்பு: ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் O.S. சாகுல் ஹமீது அவர்களின் மகளும்,...

பாதையா?? பாடையா?? விழிபிதுங்கும் அதிரையர்கள்! நெடுஞ்சாலை துறை உறக்கம் கலைக்குமா..??

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக அதிக அளவில் தொடர்...

அதிரையில் DIYWA-KAIFA-MILKY MIST இணைந்து தரமான சம்பவம்! நூற்றாண்டுகள் பழமையான குளத்தை தூர்வாரி சாதனை!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் பல்வேறு...