Home » ஐயூஎம்எல் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு – 3 தொகுதியிலும் அதிமுகவுடன் நேரடி மோதல் !

ஐயூஎம்எல் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு – 3 தொகுதியிலும் அதிமுகவுடன் நேரடி மோதல் !

0 comment

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியை பொருத்த அளவில் கருணாநிதி காலத்திலிருந்தே முதலில் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக்கொள்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தான் .

இந்த முறையும் ஸ்டாலின் தலைமையில் திமுக அதே நடைமுறையை பின்பற்றி முதலில் அந்த கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.

இந்த நிலையில்தான் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட உள்ள தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter