சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மீன்கள் கரை ஒதுங்கியது…
தூத்துக்குடியில் உள்ள புன்னைகாயல் பகுதியில் நேற்று 40 டால்பின்கள் கரை ஒதுங்கியது.இதனால் பதற்றம் அடைந்த மக்கள் கடலில் என்ன மாற்றம் நடக்கிறதோ,சுனாமி வருமோ என பயப்பட தொடங்கி உள்ளனர்.
இதனைதொடர்ந்து தற்போது,எதற்காக இந்த டால்பின் கரை ஒதுங்கி உள்ளது என ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் திடீரென சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மீன்கள் கரை ஒதுங்கியது…
இதனை கண்ட மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கரை ஒதுங்கிய மீன்களை காண்பதற்காகவே மக்கள் கடற்கரைக்கு அதிகளவில் வருகின்றனர்.
ஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொதுவாகவே ஏதாவது ஒரு இயற்கை சீற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் டால்பின் மற்றும் மீன்கள் கரை ஒதுங்கி வருவதால் சுனாமி வருமோ என்ற அச்சம் மக்களிடேயே உள்ளது.