Home » திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

0 comment

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்து தொகுதி பங்கீடு முடிக்கப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பன குறித்த பேச்சுவார்த்தை நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் மதிமுகவுக்கு, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற கட்சிகளுடன் இன்று தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வால்பாறை, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, தளி, சிவகங்கை, திருத்துறைப்பூண்டி ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.தி

முக தலைமையிலான கூட்டணியில் மீதம் இருக்கும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் இன்றே அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter