59
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கமலின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், எஸ்டிபிஐ கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் பரவியது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இன்று அமமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு போட்டியிடும் தொகுதிகளும் உறுதியானது.
அதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்தியம், பாளையங்கோட்டை ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.