தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட முக்கிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் டிடிவி. தினகரனின் அமமுக, ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஏற்கனவே அமமுக சார்பில் 15 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், இன்று 50 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் அதிமுகவில் சீட் கொடுக்காததால், அமமுகவில் இன்று இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமமுக இரண்டாம் கட்ட முழு வேட்பாளர் பட்டியல் :




