Tuesday, April 16, 2024

வங்க கடலில் அடுத்தடுத்து 2 புதிய காற்றழுத்தம் கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை : புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி, வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. கடந்த 20ம் தேதி அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்க கடல் வழியாக இலங்கையை கடந்து நேற்று அரபிக் கடலுக்கு சென்றது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது. அதிகபட்சம், ராமநாதபுரத்தில் 14 செ.மீ மற்றும் சென்னை செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவானது.

இதற்கிடையில், தென்மேற்கு வங்க கடலில் நேற்று மற்றொரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதுவும் இன்னும் ஓரிரு நாளில் தமிழக கடல் பகுதி நோக்கி நகரும் என தெரிகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேசமயம், தெற்கு அந்தமானில் தற்போது புயல் சின்னம் உருவாகியுள்ளது. அங்கு நாளை உருவாகும் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 22 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, வங்க கடலில் ஓரிரு நாளில் புயல் உருவாகலாம் என தனியார் வானிலை ஆள்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுபோன்று வங்க கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை கொட்டும் என வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா கூறுகையில், ‘தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் விட்டு, விட்டு மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...