Home » திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

0 comment

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்து தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,

கந்தர்வக்கோட்டை(தனி)

அரூர்(தனி)

திருப்பரங்குன்றம்

கீழ்வேளூர்(தனி)

திண்டுக்கல்

கோவில்பட்டி

ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், நாளை மறுதினம் நடக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter