தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்ததால், திட்டமிட்டபடி வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத சூழல் உருவானது.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டதால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
அதைத்தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. திமுக-வை பொருத்தவரை 173 தொகுதிகளிலும், உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
முழு வேட்பாளர் பட்டியல் :