அதிரை எக்ஸ்பிரஸ்:-நவ27 தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பழமையான வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை,காவலர் குடியிருப்பு பின்புறம் ASM.அஹ்மத் கபீர் அவர்களுடைய மகன் ASM தாஜுதீன் அவர்களுக்கு சொந்தமான பழமையான ஓட்டு வீடு உள்ளது.இதனை அவர் வாடகைக்கு விட்டு இருந்தார், இந்நிலையில் வீட்டின் பல பகுதிகள் மிகவும் சிதலமடைந்து காணப்பட்டது.
வாடகைக்கு இருந்தவர்களுக்கு மறு ஏற்பாடுகள் செய்து காலி செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று காலை 10:15 மணிக்கு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனை உடனடியாக மின்சார வாரியம் சரிசெய்தது.
மழைக்காலங்களாக இருப்பதால் அதிரையில் பழமையான வீடுகளில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.