39
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மூன்று தொகுதிகளில் கொமதேக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி திருச்செங்கோட்டில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பெருந்துறையில் பாலூசாமி, சூலூரில் பிரிமியர் செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் கொமதேக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.