2015ஆம் ஆண்டு கேஸ் சிலிண்டர் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் துண்டுபிரசுரம் அச்சிடப்பட்டு அதிரை முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. அதனை படித்த பலரும் தங்கள் வீட்டு வாசலில் நோட்டீஸை ஒட்டிவைத்தது மட்டுமல்லாமல் பிறருக்கும் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து நமது பிரச்சாரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தீர்கள், குறிப்பாக இதில் பெண்கள் ஆற்றிய பங்கு மகத்தானது.
குறிப்பிட்ட காலத்திற்கு ரசீதில் உள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்துக்கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள், தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர்.
இதனை நாம் ஆரம்பத்திலேயே சட்டத்திற்கு உட்பட்டு தட்டிக்கேட்க வேண்டும்.
இதுகுறித்து புகார் செய்ய மாநில நுகர்வோர் உதவி மையம் மற்றும் IOC நுகர்வோர் சேவை மைய உதவி எண்கள் இந்த பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு கேஸ் டெலிவரி செய்ய வரும் ஊழியர்கள் பில்லில் உள்ள கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் கேட்டால் உடனே கீழே குறிப்பிட்ட எண்களுக்கு கால் செய்து புகாரை பதிவு செய்யுங்கள்.
நுகர்வோர் உதவி மையம் : 044 28592828
IOC நுகர்வோர் சேவை மையம் :1800 2 333 555