Home » காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

0 comment

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக விரைவாக தேர்தல் பணியை செய்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.

இந்த நிலையில் காங்கிரசும் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று இரவு வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலின்படி

பொன்னேரி- துரை சந்திரசேகர்

ஸ்ரீபெரும்புதூர்- செல்வபெருந்தகை

சோளிங்கர்- முனிரத்தினம்

ஊத்தங்கரை- ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்

ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்

ஈரோடு கிழக்கு- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமுகன் ஈவேரா,

உதகமண்டலம்- கணேஷ்

கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார்,

உடுமலைப்பேட்டை- தென்னரசு

விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன்

அறந்தாங்கி- திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன்

காரைக்குடி- மான்குடி

மேலூர்- ரவிசந்திரன்

ஸ்ரீவில்லிபுத்தூர்- மாதவ ராவ்

சிவகாசி- அசோகன்

திருவாடனை- கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்

தென்காசி- பழனி நாடார்

நாங்குநேரி- ரூபி மனோகரன்

கிள்ளியூர்- ராஜேஷ்குமார்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு, வேளச்சேரி, குளச்சல், மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter