தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான CAA சட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையின் 500வது வாக்குறுதியில், “இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் நான்காவது நாடாக இலங்கையையும் இணைத்து, இந்தியாவில் முகாம்களில் உள்ள நாடற்ற இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
CAA-வின் முக்கிய அம்சமே இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் எனும்போது, அதனை எதிர்த்து பேரணி, கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவற்றை நடத்திய திமுக, இப்போது தனது தேர்தல் அறிக்கையில் CAA சட்டத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்தியுள்ளது.
