Home » CAA நிச்சயம் திரும்ப பெறப்படாது – தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி !

CAA நிச்சயம் திரும்ப பெறப்படாது – தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி !

0 comment

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், பாஜக தொடர்ந்து சிஏஏ-வுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை இந்த முறை பாஜத, பாமக ஆகிய கட்சிகளுடன் இணைந்து அதிமுக எதிர்கொள்கிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இலவச வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என வாக்காளர்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றிருந்தது.

அதேபோல குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதேபோல திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என்றும் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்க வலியுறுத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

தொடக்கம் முதலே திமுக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணியும் நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன.

ஆனால், அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக தொடர்ந்து சிஏஏவுக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வருகிறது. பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த திமுகவின் வாக்குறுதியைக் கடுமையாக எதிர்த்துள்ளார்.

இது குறித்து சிடி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “சிஏஏ-வுக்கு எதிராகத் தனது கட்சி தொடர்ந்து போராடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வரும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார்? ஸ்டாலின் மட்டுமல்ல வேறு யாரும் இதை எதிர்க்கக் கூடாது. சிஏஏ என்றும் ரத்து செய்யப்படாது” என்று பதிவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என்று அதிமுக அதன் தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான பாஜக தொடர்ந்து அதற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter