மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராகவும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் தமிமுன் அன்சாரி. தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கடந்த 5 ஆண்டு காலத்தில் நாகை தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். மேலும் மக்கள் விரோத திட்டங்கள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சட்டமன்றத்தின் உள்ளும், வெளியிலும் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டாலும், பாஸிசத்திற்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவின் மதற்ச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை 5 பெரும் கோரிக்கைகளோடு ஆதரிக்கிறோம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் நாளை 19/03/2021 வெள்ளிக்கிழமை மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியின் சேவைகள் மற்றும் அரசியல் நடவடிக்கையை பாராட்டி பாராட்டு விழா நடைபெறுகிறது.
அகில உலக அதிரை சமூக ஆர்வலர்கள் சார்பில் பதவியா ? கொள்கையா ? என்ற நிலையில் தியாகப்பூர்வமாக முடிவெடுத்த மு. தமிமுன் அன்சாரி MA MLAவுக்கு பாராட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை(19/03/2021) மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.
இந்த பாராட்டு விழாவுக்கு J. அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்புரை ஆற்றுகிறார். டாக்டர். அஷ்ரப் அலி MD, அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி தலைமை இமாம் M.G. சஃபியுல்லாஹ் அன்வாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இவ்விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

