தமுமுகவின் அதிரை நகர கிளை அலுவலகம் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை மாலை கடைத்தெருவில் உள்ள SAH டவரில் நடைபெற்றது.
அலுவலகத்தை தமுமுகவின் நகர முன்னாள் தலைவர் உமர்த்தம்பி மரைக்காயர் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் அஹமது ஹாஜா கலந்து கொண்டார். முன்னதாக நகர செயலாளர் சேக்தாவூது கழகத்தினரை வரவேற்றார்.
இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை, நகர திமுக செயலாளர் இராம. குணசேகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் சேக் மொய்தீன், மாவட்ட பொருளாளர் ஜஃபருல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் முஹமது சேக்காதி, மரைக்கா என்கிற அப்துல் கஃபூர் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழுவலக திறப்பு விழாவில் ஏராளமான தமுமுகவினர் கலந்து கொண்டனர். இறுதியாக நகர தமுமுக தலைவர் அலீம் நன்றி கூறினார்.







