112
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளார் SDSசெல்வம் அவர்கள் இன்று தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொகுதிக்குட்பட்ட கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களை சந்தித்து வந்தார்.
அதன் ஒருபகுதியாக அதிரைக்கு வருகை புரிந்த SDS செல்வம் அவர்கள் தேசிய மனித உரிமை அமைப்புகள் கூட்டமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான Z.முஹம்மது தம்பி அவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நமதூரிலும் தொகுதியிலும் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவாக எடுத்து கூறியதுடன் கோரிக்கைகளை முன்வைத்தார்.