கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.இதன் எதிரொலியாக கல்லூரிகளை மூடுவதற்கு உயர்கல்வி துறை ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் தொழில் நிமித்தமாக சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்கு தயாராகி வருகிறார்கள். இதில் கொரோனா தொற்றுடையவர்கள் இருக்ககூடும் என்பதால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கபட வேண்டும் என பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடந்த கால கசப்பான அனுபவங்களை அரசு நினைத்து இடம் பெயரும் அனைவருக்கும் அனைத்து மாவட்ட எல்லைகளிலும் கொரோனா பரிசோதனை முகாமை 24மணி நேரமும் நிறுவ வேண்டும்.
இதன் காரணமாக தொற்றுடையவர்களால் பெருமளவில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறனர்.
அதேபோல் தொலைதூர பேருந்து, ரயில் இவைகளில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும்,வெளி மாநிலத்தில் இருந்து செயல்படும் போக்குவரத்தை நிலைமை சீராகும் வரை மூட வேண்டும் தொற்று அதிகமாக இருக்கும் மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் விமான சேவையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மாநில சுகாதார அமைப்பு முன்னெடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.