அதிமுக கட்சியை சேர்ந்த ராஜ்யசபை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் சில மாதங்கள் அமைச்சராக பதவி வகித்தவர். முன்னதாக 1996ம் ஆண்டு முகமது ஜான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் உள்ளவர்.
திடீரென இன்று மாலை நெஞ்சுவலி என்று அவர் தனது குடும்பத்தாரிடம் கூறி உள்ளார். உடனடியாக குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் முகமது ஜான் பணியாற்றி வந்தவர். கடந்த 2019ம் ஆண்டு அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.