148
புகாருக்குள்ளாகும் கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று பாஜக பரப்புரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? புகாருக்குள்ளாகும் கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதி காக்குமா? என சரமாரி கேள்விகளை எழுப்பியது.
இதுதொடர்பாக மார்ச் 26-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.