Friday, April 19, 2024

நாளை முதல் தொடர்ந்து 7 நாட்கள் வங்கிகள் மூடப்படுகிறதா? அதிகாரிகள் விளக்கம்!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கடந்த வாரம் வங்கிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதே இந்த தொடர் விடுமுறைக்கு காரணம். இதனால் பொதுமக்கள் பணத்தை எடுக்க மற்றும் பிற வங்கி சேவைகள் கிடைக்காமல் திண்டாடினர்.

நாளை முதல் தொடர்ந்து 7 நாட்கள் வங்கிகள் மூடப்படுகிறதா? அதிகாரிகள் விளக்கம்!தற்போது மீண்டும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை உள்ள 7 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரம் வங்கிகளுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தியதே இந்த தொடர் விடுமுறைக்கு காரணம். இதனால் பொதுமக்கள் பணத்தை எடுக்க மற்றும் பிற வங்கி சேவைகள் கிடைக்காமல் திண்டாடினர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை உள்ள 7 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த தகவலின்படி, மார்ச் 27ம் தேதி நான்காவது சனிக்கிழமை, 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 29ம் தேதி ஹோலி பண்டிகை, 31ம் தேதி ஆண்டு கணக்கு முடிக்க இறுதி நாள், ஏப்ரல் 1ம் தேதி நிதியாண்டில் முதல் நாள், ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 4ம் தேதி ஞாயிறுக்கிழமை எனவே விடுமுறை என செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து விளக்கிய வங்கி அதிகாரிகள், வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி உண்மை இல்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கிய அவர்கள், மார்ச் மாதம் 27ம் தேதி கடைசி சனிக்கிழமை, 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. ஆனால் மார்ச் 29 ஹோலி பண்டிகை, இதற்கு தமிழகத்திற்கு விடுமுறை இல்லை வட மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை, இதேபோல மார்ச் 30 அன்று பாட்னாவில் மட்டும் வங்கி சேவைகள் மூடப்படும்.

மார்ச் 31ம் தேதி நிதியாண்டு முடிவு அன்று விடுமுறை விடப்படும். அதேபோல ஏப்ரல் 1, 2 வங்கி முழுவருட கணக்கு முடிவு மற்றும் புனித வெள்ளிக்கு விடுமுறை விடப்படும். ஆனால் அதற்கு மறுநாள் ஏப்ரல் 3ம் தேதி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும், ஏப்ரல் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை என தகவல் அளித்துள்ளனர்.

வங்கி தொடர்பான சேவைகளை பெற நீங்கள் திட்டமிட்டிருந்தால், விடுமுறை நாட்களின் பட்டியல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...