தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளிவாயிலில் ஜுமுஆ தொழுகை முடிந்து வருபவர்களிடம் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்திற்காக அமமுக கூட்டணி கட்சியினர் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் கீர்த்திகா அன்புவிற்காக நாம் தமிழர் கட்சியினர் என பள்ளிவாயிலின் இருபுறமும் நின்று பிரச்சாரம் செய்தனர்.
அப்போது இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் தாங்கள் செய்த நன்மைகளையும், பங்கேற்று குரல் கொடுத்த பிரச்சனைகளை கூறியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.