தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதுக்கூரில் யார் இவர் ? என்ற தலைப்பில் மாபெரும் மாவட்ட மாநாடு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மூன்றாவதாக தஞ்சை மாநகர பகுதிக்கான அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மதுக்கூர் பூண்டியார் திடலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் தஞ்சை வடக்கு, திருவாரூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் அர்ஷின் நிழல் என்ற தலைப்பில் சிறுமி முபினா அப்துல் வாஹித், ஸஹாபியப் பெண்களும் இன்றைய பெண்களும் என்ற தலைப்பில் சகோதரி. மர்லியா ஆலிமா அவர்களும், இலக்கை மறந்த இளைஞனே என்ற தலைப்பில் அன்ஸர் MISC அவர்களும், நபிவழியே நம்வழி என்ற தலைப்பில் ஹமீது ரஹ்மான் அவர்களும், நபிகளார் உருவாக்கிய மனிதநேயம் என்ற தலைப்பில் மாநில செயலாளர் E. முஹம்மது அவர்களும், உலகம் வியக்கும் ஆட்சியாளர் என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்றினர்.
பின்னர் தஞ்சை மாநகர பகுதிக்கான புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. முக்கிய தீர்மானங்களை மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் வாசித்தார். மாவட்ட துணை செயலாளர் வல்லம் ஜாபர் நன்றியுரை கூறினார். இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மதுக்கூர் கிளை நிர்வாகிகள், ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.




