இலங்கை அருகே ஏற்பட்ட காற்றலுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அதிரையில் இன்று அதிகாலை முதலே விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் வண்டிப்பேட்டை சாலை பேரூந்து நிறுத்தம் எதிரில் இரவு திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இதனையறிந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை சரி செய்தனர்.