Home » மாநில உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு – பொங்கி எழுந்த கர்நாடக பாஜக அமைச்சர்!

மாநில உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு – பொங்கி எழுந்த கர்நாடக பாஜக அமைச்சர்!

0 comment

மைசூரில் நடைபெற்ற ‘தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சுதந்திரம்’ என்ற தலைப்பிலான அகில பாரத ஷரனா சாகித்ய பரிஷத் கருத்தரங்கில் மாதுசாமி பங்கேற்று பேசினார். அப்போது மத்திய அரசின் சர்வாதிகார அணுகுமுறை ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

மாதுசாமி கூறியதை பாருங்கள் : மருத்துவ கல்விக்கு நீட் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகா மற்றும் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அந்த கூட்டத்தில் பங்கேற்று இருந்த பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை பார்த்து மாதுசாமி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசின் கொள்கைகள் ஏற்கனவே முன்னேறியவர்களை மேலும் முன்னேற்றுவதாக இருக்க வேண்டும். பின்தங்கி இருப்பவர்களை கைகொடுத்து இன்னும் உயரத்துக்கு கொண்டு வர செய்ய வேண்டும். ஆனால் இப்போது அப்படி இருக்கிறதா. நீட் தேர்வுக்கும் நமது மாநிலத்திற்கு என்ன தொடர்பு ? கர்நாடகாவில் 160 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ சீட்கள் காலியாக இருக்கின்றன. நான்கு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன். அமைச்சர் என்ற முறையிலும் எனது கருத்து இதுதான். மத்திய அரசு சர்வாதிகார தனமாக நடந்து கொள்வதுதான் பிராந்தியவாதம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம். இதை உறுதியாக சொல்ல முடியும்.

பாஜகவினராகிய நாம் இந்திரா காந்தி பற்றி விமர்சனம் செய்யும்போது, ஏற்கனவே முன்னேறியவர்களை கீழே இழுத்து ஏற்கனவே பின் தங்கி இருப்பவர்களுக்கு ஈடாக மாற்றுவார் என்போம். அதாவது ஒரு பங்களாவை இடித்து அங்கு வசிப்பவரை குடிசைவாசிகள் உடன் வாழ்க்கை நடத்த சொல்லி இதுதான் சமூகநீதி என்று சொல்வார் என்று நாம் விமர்சனம் செய்வோம். அது சமூகநீதியல்ல. பின் தங்கி இருப்பவர்களையும் உயரத்துக்கு கொண்டு செல்வதுதான் சமூகநீதி.

இப்போது என்ன நடக்கிறது. மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது . மத்திய மற்றும் மாநில அரசு ஆகியோருக்கு பங்கிட்டுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கன்கரன்ட் சப்ஜெக்ட் விஷயங்களையும் மத்திய அரசு ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவ்வாறு மாதுசாமி பேசினார்.

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முன் வைத்தது போன்ற குற்றச் சாட்டை கர்நாடகா பாஜக அரசில் அமைச்சராக இருக்கக் கூடிய ஒரு சீனியர் தலைவர் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. மாநில அரசின் நலன்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் மாநில நலன்களை முன்வைத்து பல அமைப்புகள் மற்றும் பல கட்சிகள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் மாதுசாமி.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter