தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 1 வாரமே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக கா. அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக திமுக வேட்பாளர் கா. அண்ணாத்துரை இன்று அதிராம்பட்டினத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு அதிரை முழுவதும் பிரச்சாரம் செய்தார். அப்போது பேரூர் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேட்பாளருடன் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


