81
அதிராம்பட்டினம் நகரில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை முதல் அதிராம்பட்டினத்தில் துணையாட்சியர் தலைமையில் மூன்று ஜோன்களாக பிரிக்கப்பட்டு வாக்குகளை பெற்றனர்.
முன்னதாக வாக்கு சிட்டில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும் அதற்கு வாக்காளருக்கு உதவிட யாரை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நடைமுறைகளை அதிகாரிகள் எடுத்து கூறினர்.
அதன் பின் வாக்கு செலுத்த வேண்டிய படிவத்தில் வாக்கு செலுத்திய பின்னர் சீலிடப்பட்டு வாக்கு பெட்டியில் செலுத்தினர்.
இந்த தபால் வாக்கு செலுத்தும் இடங்களுக்கு துணை ஆட்சியர் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்து வருகிறார்கள்.