ஒரு ரூபாய் வரலாறு!
பார்க்கக்கூடிய சில விஷயங்களில் மிகவும் அரிதான ஒன்று நாம் பயன்படுத்திய ஒரு ரூபாய். அந்த ஒரு ரூபாய் நோட்டிற்கு இன்றுடன் 101 வயது ஆகிறது.
ரூபாய் நோட்டு இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நாடு சென்று கொண்டு இருக்கிறது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ஒரு ரூபாய் நோட்டை கண்ணில் பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஏனெனில் அதன் மதிப்பு குறைந்து போய்விட்டது.
ஆனாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை, ஒத்த ரூபா கூட இல்லையா? என்பது வழக்கு சொல்லாக இருக்கிறது. அந்த ஒத்த ரூபாய் நோட்டுதான் தற்போதைய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது.
இந்தியாவில் முதன் முதலாக கி.பி.1770-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்துஸ்தான் என்ற தனியார் வங்கி மூலம்தான் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. பின்னர், ரூபாய் நோட்டுகள் இந்திய அரசின் அதிகாரப்பபூர்வ நோட்டாக கடந்த 6-8-1861-ம் ஆண்டு முதல் வெளியானது. முதலில் வெளியான 10 ரூபாய் நோட்டு ஒரு பக்கம்தான் அச்சிடப்பட்டு இருக்கும். பின்புறம் வெள்ளையாகவே இருந்தது.
இந்த நிலையில் ஒரு ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரு பக்கமும் அச்சிடப்பட்ட முதல் நோட்டும் இதுதான். அதில் 5-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் அச்சிடப்பட்டு இருக்கும்.
இதைத்தொடர்ந்து கடந்த 1935-ம் ஆண்டு முதல், நோட்டு அச்சிடும் முழு அதிகாரத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றது. முதலில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டில் தமிழ் உள்பட 8 மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தற்போது வெளியாகும் ரூபாய் நோட்டுகளில் 15 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. 1940-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட 1 ரூபாய் நோட்டில் 6-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு வெளியான நோட்டில் அப்போதைய நிதித்துறை செயலாளர் கையொப்பம் இடம் பெற்றது. ஜார்ஜ் மன்னருக்கு பதிலாக அசோக் ஸ்தூபி சின்னம் இடம் பெற்றது.
1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரையிலும், 1958-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரையிலும், 1982-ம் ஆண்டிலும் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. மீண்டும் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க அரசுக்கு ரூ.1.14 பைசா செலவாகிறது.
More like this
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
Elementor #88400
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5's மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர்...