தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகர கிளை சார்பாக இன்று 04/04/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நீர் மோர் விநியோகம் நடைபெற்றது. பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் (அத்தீனுன் நஸிஹா) என்ற நபிகள் நாயகத்தின் சொல்லிற்கேற்ப இப்பணி நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு கிளை தலைவர் செய்யத் முஸ்தபா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
கிளை செயலாளர் அரஃபாத், கிளை பொருளாளர் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவரணி செயலாளர் சபிதீன் , வர்த்தகர் அணி சுலைமான் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
கிளை உறுப்பினர்கள் இப்ராஹீம், பாரூக், ராசிக், கிளை இமாம் சேக் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் 1500 பேருக்கு நீர் மோர் விநியோகம் செய்யப்பட்டது.