தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கியது. அதனடிப்படையில் வாக்குப்பதிவு தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7மணி முதல் தொடங்கியது.
முன்னதாக அதிகாரிகள் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குகள் செலுத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் அவ்வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டுவந்து சீலிடப்பட்டன.
அதனை தொடர்ந்து வாக்கு பதிவு முறையாக தொடங்கப்பட்டது. அதிரையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை, முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கி வாக்களிக்க வழிகாட்டப்பட்டு வருகிறார்கள்.
வாக்கு சாவடியில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் கூட்டம் கூடுவதை தடுக்கும் நோக்கில் துணை ராணுவபடையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்கானித்து வருகிறார்கள்.