தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வரும் மணி நேரங்களில் வாக்குப்பதிவு சதவிகிதம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.