Thursday, April 25, 2024

தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வெயில் காலம் என்பதால் வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காளர்கள் குவியத்தொடங்கினர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டிருந்தது.

காலை தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவைகள் அறைகளில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்து அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், முழுமையான வாகுப்பதிவு சதவிகிதம் வரவில்லை என்றார்.

தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறியில் 78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சம் சென்னையில் 59.40 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும் என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

நாளை முதல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழுவினரால் பணப் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் ஜெனரேட்டர் வசதி செய்யப்படும்.

அறந்தாங்கி தொகுதியில் ஈவிஎம் உடைக்கப்ப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படும் நாட்களில் ஊரடங்கு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக நான் தகவல் கூற முடியாது மாநகராட்சி மூலமே அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...